"10 ஆண்டுகளுடன் முடிவடைகிறதா ஆதார்..?" - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

x

"10 ஆண்டுகளுடன் முடிவடைகிறதா ஆதார்..?" - மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய முன்னணி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மாநில அரசுகளுக்கு வெளியிட்ட உத்தரவில், ஆதார் அட்டைதாரர்கள் அதன் பதிவு செய்யப்பட்ட தேதி முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டால், ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என கூறியுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் அளித்து ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மை ஆதார் இணையதளம் மற்றும் செயலி மூலம் ஆதார் அட்டையை புதுப்பித்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆதார் எண் வழங்கியதில் இருந்து 10 ஆண்டுகள் கடந்தவர்கள் கட்டாயம் ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம் என கூறியுள்ள மத்திய அரசு, இதன் மூலம் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தில், ஆதார் தொடர்பான தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஆதார் வழங்கும் யுஐடிஏஐ(UIDAI), ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில், ஆதார் புதுப்பிக்கும் உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்