"மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் - ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் மட்டும் இல்லை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் 56 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்த "மாமனிதன் வைகோ" என்ற ஆவணப்படம் முதலமைச்சர் தலைமையில் வெளியிடப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் திரையங்கில் நடைபெற்ற விழாவில் மாமனிதன் வைகோ ஆவணப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வைகோவின் ஆவணப்படத்தில், அண்ணா, கருணாநிதி, பிரபாகரன், வாஜ்பாய், மன்கோகன் சிங், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுடனான அரசியல் பயணம் இடம்பெற்றுள்ளது.
ஆனால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடனான அரசியல் பயணம் மட்டும் ஆவணப்படடத்தில் இடம்பெறவில்லை.
Next Story