கேரளாவை உலுக்கிய டாக்டர் கொலை - கொண்டு வரப்பட்ட அவசர சட்டம்

x

கேரளாவில், மருத்துவமனை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கேரள மாநிலம் கொட்டாரக்கரை பகுதியில், டாக்டர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மருத்துவர்கள், சுகாதார ஊழியர்களை தாக்குபவர்களுக்கு கடும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கான அவசரச் சட்டம் இயற்றக்கோரியும்,

டாக்டர் வந்தனாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், அம்மாநில மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கேரள அமைச்சரவை கூட்டம், முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இதில், மருத்துவமனை பாதுகாப்பு சட்டத் திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, சுகாதார ஊழியர்களுக்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டால், 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. டாக்டர் வந்தனா தாஸ் படுகொலை சம்பவத்தை தொடர்ந்து, இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்