பட்டினி கிடந்து படிக்க வைத்த காவிய கணவன்.. ஊரே மெச்ச சாதித்த வைராக்கிய மனைவி..!

x

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று பாடினார் பாரதி... ஒரு ஆண் கல்வி கற்றால் அவர் ஒருவருக்கு மட்டுமே அறிவு... ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அது அந்த குடும்பத்திற்கான அறிவு... வீட்டோடு நாட்டையும் சேர்த்து உயர்த்துவது பெண் கல்வி...

இதை நன்கு உணர்ந்த ஷேக் காதர், தான் எப்பேற்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும், தன் மனைவி எந்த காரணத்திற்காகவும் கல்வியை விட்டு விடக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்துள்ளார்...

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது, டாக்டர் பட்டம் பெற்ற நீலா என்பவர், பட்டம் வழங்கிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஏதோ முனுமுனுக்க, அமைச்சர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி... அது என்னவாக இருக்கும் என அனைவரும் ஆவலாகக் காத்திருக்க பிறகு தான் தெரிய வந்தது விஷயம்... 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஷேக் காதர், தனது மனைவி நீலாவை இதுவரை 12 பட்டப்படிப்புகளைப் படிக்க வைத்து அசத்திய செய்தியைக் கேட்டதும் அரங்கமே கைதட்டல்களால் நிறைந்தது...

தர்மபுரியில் இருந்து வந்துள்ள நீலா, 1994ல் பி.எஸ்.சி. நர்சிங் முடித்த கையோடு ஷேக் காதரைத் திருமணம் முடித்துள்ளார்... திருமணம் கல்விக்கு முட்டுக்கட்டையல்ல என்பதை நன்கு உணர்ந்த நீலாவை, தொடர்ந்து படிக்க காதர் உற்சாகமூட்டியுள்ளார்... விளைவு, இன்று டாக்டர் பட்டம் பெற்று, வெறும் நீலா - முனைவர் நீலா"-வாகி அசத்தியுள்ளார்...

நீலா, 12 பட்டங்கள் பெற்றவர்

"திருமணம் படிப்பிற்கு முட்டுக் கட்டையல்ல"

"கல்யாணத்திற்குப் பிறகும் படிக்க வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்