சாலையில் நடந்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், காப்பாடு - கோயிலாண்டி பகுதிகளுக்கு இடையிலான கடலோர சாலை, கடந்த 2019ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின்போது, பல கோடி ரூபாய் செலவில், பக்கவாட்டுச் சுவர்களை பலப்படுத்தி செப்பனிடப்பட்டது. இந்நிலையில், தற்போது கடல் சீற்றம் அதிகரித்து, கடலரிப்பால் அந்தச் சாலை உருக்குலைந்துள்ளது. இச்சாலையில் நடந்து கூட செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வந்த நிலையில், இந்த தடையால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றம் தொடர்ந்தால் ஒட்டுமொத்த சாலையும் இழுத்துச் செல்லக்கூடிய அச்சமும் பொதுமக்களிடையே நிலவுகிறது.
Next Story