"அடுத்த 2 தினங்கள் போகாதீங்க..."- எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
தமிழக மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு கடலுக்கு செல்லக் கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் என்பதால் மத்திய மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையும், சில நேரங்களில் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லக் கூடாது என வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
Next Story