அண்ணாமலை நிகழ்ச்சிக்கு திமுகவினர் எதிர்ப்பு - கரூரில் பரபரப்பு

x

கரூரில், பாஜக நிகழ்ச்சிக்காக பந்தல் அமைக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

கரூர் மாநகரில், 'மாற்றத்திற்கான மாநாடு' என்ற பெயரில் பாஜக சார்பில் வரும் 1ம் தேதி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக, மாநகரில் அமைந்துள்ள திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பந்தல்கள் அமைப்பதற்காக பொருட்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் பந்தல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான திமுகவினர் ஒன்றுக்கூடியதால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருதரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது.


Next Story

மேலும் செய்திகள்