2024 நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்குகிறது திமுக | MK Stalin | DMK | 2024 Parliament Election
திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் மாதம் ஒரு மண்டல கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. திருச்சியை தொடர்ந்து ராமநாதபுரத்தில் அடுத்த மண்டல கூட்டம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி நடத்த திட்டம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பயிற்சி பாசறையை தொடங்கி வைத்து தேர்தல் பணிகளை தொடங்கி வைக்கிறார். நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பொறுப்பாளரை நியமிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. முதற்கட்டமாக, திருச்சி - கரு மண்டபம் ராம்ஜி நகரில், டெல்டா மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் வரும் 26-ஆம் நாள் நடைபெறவுள்ளது. இப்பயிற்சி முகாமில் டெல்டா மாவட்டங்களில் உள்ள 15 கழக மாவட்டங்களில் இருந்து 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.