"அந்த அம்மா புருஷன் ஒரு சாராய வியாபாரி".. "இந்த அம்மா புருஷன் ஒரு கஞ்சா வியாபாரி" - திமுக தலைவி Vs திமுக பெண் கவுன்சிலர் கடும் மோதல்
மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டத்தில் திமுகவை சேர்ந்த தலைவியும், உறுப்பினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தலைவி தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் திமுக கவுன்சிலர் கனிமொழி தனது வார்டுக்கு தலைவி நிதி ஒதுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தலைவிக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து உரிய பதில் கிடைக்கும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று கனிமொழி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக குற்றச்சாட்டை சுமத்தினர். கவுன்சிலர் கனிமொழி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழ்ச்செல்வி தனக்கு பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.