திரண்டு வந்து கால்வாய் போட்ட திமுகவினர் - சென்னையில் பரபரப்பு

x

சென்னை சிட்லபாக்கத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் பணியில் குறைகள் இருப்பதாக‌க் கூறி திமுகவினர் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கான்கிரீட் கால்வாய் அமைக்கும் போது, போதுமான இரும்பு கம்பிகள் இல்லை எனக்கூறி அதிகாரிகளுடன் ஆய்வு செய்த மண்டல தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், வேலையை நிறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வந்த திமுகவினர், குறைகளை சரி செய்யாமல் ஜல்லி போட ஒப்பந்ததாரரை வலியுறுத்தியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, திமுகவினர் கான்கிரீட் போடும் பணிகளை செய்து முடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்