"அன்பை காட்டுவது போல் அடக்குமுறைகளை கையாள்கிறார்கள்" - கனிமொழி எம்.பி. பரபரப்பு பேச்சு...

இப்போதும் ஆண் சமூகம் பெண்கள் மீது அன்பை காட்டுவது போல் அடக்குமுறைகளை கையாள்கிறார்கள் என திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
x

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திரைக்கதை வசனத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தின் 70 - வது ஆண்டை கொண்டாடும் விதமாக சென்னை அடையாறில் உள்ள தாகூர் திரைப்படம் மையத்தில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. பராசக்தி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திமுக எம்.பி. கனிமொழி, மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். பராசக்தி படத்தை பார்த்த பிறகு அவர்கள் பகிர்ந்த கருத்துக்களை பார்ப்போம்.



Next Story

மேலும் செய்திகள்