“நைட்டும், பகலும் உழைச்சு இருக்கோம் ரூ. 2 கோடிக்கு கட்டி இப்ப தனியாருக்கா..?“ - அதிகாரிகளை தட்டிக்கேட்ட திமுக நிர்வாகி
வேடசந்தூரில் காய்கறிகள் பதப்படுத்தும் குடோனை நூற்பாலைக்கு வாடகைக்கு விட்ட அரசு அதிகாரிகளை, திமுக நிர்வாகி தட்டிக் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில், 2 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட காய்கறி பழங்கள் பதப்படுத்தும் குடோனை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் அந்த குடோனை தனியார் நூற்பாலைக்கு அரசு அதிகாரிகள் வாடகைக்கு விட்டுள்ளனர். இதையறிந்த அப்பகுதி திமுக நிர்வாகி மாசி, நேரடியாக குடோனுக்கு சென்று பொங்கியெழுந்து, அதிகாரிகளை தொலைபேசியில் அழைத்து கேள்வி எழுப்பினார். மேலும் ஒரு வருடமாக குடோன் எப்போது திறக்கப்படும் என விவசாயிகள் காத்திருந்ததாகவும், மக்களிடம் சென்று வாக்கு கேட்டவர்களுக்குத்தான் அந்த கஷ்டங்கள் தெரியும் என்றும் வேதனையுடன் பேசினார்.
Next Story