பிரபல நடிகை குறித்து காதே கூசும்படி அருவருப்பாக பேசிய திமுக நிர்வாகி.. நீண்ட நாக்கு.. நறுக்கிய திமுக.. பாயும் போலீஸ்

x

அதிமுக நிர்வாகியும், நடிகையுமான விந்தியா குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக திமுக நிர்வாகி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்தவர், திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் குமரன்...

சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்கள் கட்சி தலைவர்களை அவதூறாக பேசி வருவதாகவும், இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் படியும் தொடர்ந்து பல கட்சி நிர்வாகிகள் புகாரளித்து வந்ததால், பெரும் சர்ச்சைக்கு உரியவராகவே மாறிப்போனார் இவர்..

இதில், கடந்த 2019 ஆம் ஆண்டும் பரபரப்பு சம்பவம் ஒன்றில் சிக்கினார் குடியாத்தம் குமரன்... திமுகவின் பொதுச்செயலாளரான துரைமுருகன் மற்றும் அவரது மகன் குறித்து இவர் அவதூறாக பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது...

இதனால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட இவர், கிட்டதட்ட இரண்டு வருடங்கள் கழித்து மன்னிப்பு கேட்டதற்கு பிறகே மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்...

இதைதொடர்ந்து அதிமுக ஆட்சியின் போது அமைச்சர்களாக இருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி, கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நிலைக்கும் தள்ளப்பட்டார் ...

இதன்பின் தற்போதைய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பலர் குறித்து குடியாத்தம் குமரன் யூடியூப்பில் அவதூறாக பேசிவருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளரும், நடிகையுமான விந்தியா குறித்து ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக கூறி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்...

அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான இன்பதுரை, தேசிய மகளிர் ஆணையத்தில் விந்தியா சார்பில் புகாரளித்திருக்கிறார்...

தேசிய மகளிர் ஆணையம் இந்த புகார் மனுவை சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி உத்தரவிட்டது...

இந்நிலையில், பெண்களை ஆபாசமாக மற்றும் அவமரியாதையாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் என மூன்று பிரிவுகளின் கீழ் குடியாத்தம் குமரன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்