அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக பிரமுகர் வாக்குவாதம்

x

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது, கோவிந்தராஜ் என்ற திமுக பிரமுகர், தனது மகனுக்கு அரசு வேலை வழங்காமல் 21 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக குற்றம் சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். தாசநாயக்கன்பட்டி பகுதியில் 2001ஆம் ஆண்டு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தவறுதலாக தனது முதல் மகன் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில், மற்றொரு மகனுக்கு அரசு வேலை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அப்போது அவர் குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வெளியேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்