திமுக கவுன்சிலர்கள் ரோட்டில் அமர்ந்து தர்ணா - நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு | Cheyyar | DMKCouncilor

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகராட்சியில், மாதாந்திர நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய 22வது வார்டு உறுப்பினர் சௌந்தர பாண்டியன், தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் 40 லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக நகராட்சி ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 5 திமுக கவுன்சிலர்கள், வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் செய்யாறு சார் ஆட்சியரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்