"இது என் பஞ்சாயத்து.. நீ ஏன் பண்ற" - அதிமுக கவுன்சிலர் vs திமுக ஊராட்சி தலைவர் வாக்குவாதம்
கன்னியாகுமரியில் அதிமுக யூனியன் கவுன்சிலரின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட பணியை தடுத்து திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த பிராங்க்ளின். அங்கு வார்டு கவுன்சிலரானஅதிமுகவை சேர்ந்த மேரி ஜோய் என்பவர், ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியின் கீழ் சந்தையின் மேற்கூரை அமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ளார். அப்போது, தனது விருப்பத்திற்கு மாறாக பணிகள் நடைபெறுவதாக கூறி, மேரி ஜோய் உடன் திமுக ஊராட்சி மன்ற தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story