தீபாவளி பயணம் ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.

சென்னையில் பணிபுரியும் வெளி மாவட்ட மக்கள், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்படுவார்கள். இதனை முன்னிட்டு, தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது.சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்ல குறைந்த பட்சம் ஆயிரத்து 899ல் இருந்து அதிகபட்சம் 2 ஆயிரத்து 938 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ஆயிரத்து 699 முதல் 2 ஆயிரத்து150 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னையில் இருந்து திருச்சி செல்ல, ஆயிரத்து 799 முதல் 3 ஆயிரத்து 400 வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்ல ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரத்து 999 வரை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்