கடைவீதிகளில் நள்ளிரவிலும் அலைமோதும் மக்கள் கூட்டம் - களைகட்டும் தீபாவளி பண்டிகை |

x

தீபாவளியை முன்னிட்டு கும்பகோணத்தில் நள்ளிரவு 12 மணி வரை கடைகள் திறந்திருந்து விற்பனை நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் ஜவுளி முதல் அனைத்து வகையான பொருள்கள் வாங்குவதற்காக நள்ளிரவு வரை கடைகள் திறந்திருந்தன. மழை இல்லாத காரணத்தினால் வியாபாரம் பெருமளவு பாதிப்படையவில்லை. சுமார் 200-க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெற்றது. போலீஸ் உதவி மையம் மூலம் 24 மணி நேரமும் போலீசார் செயல்பட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பொதுமக்கள் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்தனர். பொதுமக்கள் அதிகம் கூடும் மார்க்கெட் சாலை, காந்தி சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நெரிசல் அதிகமாக காணப்படுவதால், திருட்டு சம்பவங்கள் நடக்காமல் இருக்க, போலீசார் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்