அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை... ஆவின் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

x

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்படவுள்ள நிலையில், ஆவின் இனிப்புப் பொருட்களின் விலை 20 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

குலோப் ஜாமுன் 125 கிராம், 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், ரசகுல்லா 100 கிராம், 40 ரூபாயில் இருந்து 45 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.

பால்கோவா 500 கிராம், 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், மைசூர் பாகு 500 கிராம், 230 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு 17 வகையான இனிப்புப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்