தீபாவளியன்று ஏற்பட்ட பட்டாசு புகை.. ஒருவர் 31 சிகரெட் பிடிப்பதற்கு சமம் -பூவுலகின் நண்பர்கள் குழு
தீபவாளிக்கு வெடித்த பட்டாசு புகையால் சென்னை இப்பொழுது வரை மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது என பூவுலகின் நண்பர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
இதுக்குறித்து பூவுலகின் நண்பர்கள் வெளியிட்ட பதிவில், தீபாவளி தினத்தன்று சென்னையின் காற்றின் தரம் 786AQI வரை பதிவாகி உள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இது ஒருவர் 31 சிகெரட் பிடித்ததற்கு சமம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தீபாவளியன்று இரவு வெடித்த பட்டாசு புகை காரணமாக எத்தனை கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டனர், எத்தனை ஆஸ்துமா நோயாளிகள் மற்றும் வயதானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர், என்கிற பட்டியலை அரசு வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் டெல்லி அரசை போல பட்டாசு வெடிக்க தமிழக அரசும் தடை விதிக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் குழு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.