ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஜிப்சம் கழிவுகள் அகற்றம்

x

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் மற்றும் அபாயகரமான கழிவுகளை அகற்றுவதற்கான பணிகள், கடந்த 23ம் தேதிமுதல் நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக ஆலையிலிருந்து ஜிப்சம் கழிவுகள், எஃப்.எல் இயந்திரங்கள் மூலம் வெட்டி எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றன. 3வது நாளாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உள்ளே 11 லாரிகள் அனுமதிக்கப்பட்டு, சுமார் 430 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. லாரிகள் மூலம் விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலை, ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு ஜிப்சம் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன. இதுவரை ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து சுமார் 1,250 டன் ஜிப்சம் கழிவுகள் வெளியெற்றப்பட்டுள்ளன. இப்பணிகளை துணை ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையிலான குழுவினர், சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்