ஏசியால் ஏற்பட்ட விபரீதம்...திடீரென பற்றி எறிந்த வீடு...வெளியேற முடியாமல் தவித்த குடும்பம்
சென்னையில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றிய வீட்டில் இருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்...
அசோக் நகர் வாசுதேவபுரத்தைச் சேர்ந்தவர் முகுந்தன். தனியார் நிறுவன ஊழியரான இவரது வீட்டில், ஏசியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அதிகாலை நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அதிக அளவில் புகை வருவதை கண்டு வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட தொடங்கியுள்ளனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த மின் மாற்றிகள், லேப்டாப் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அனைத்தும் எரியத் தொடங்கியுள்ளன. இதனிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், வீட்டில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்த நிலையில், தாளிடப்பட்ட கதவை திறக்க முடியாமல் வீட்டில் இருந்தவர்கள் தவித்தனர். ஒரு வழியாக, ஏணியை வைத்து பால்கனி மூலம் வீட்டில் இருந்தவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்