"இது முடித்தவுடன் சினிமாவுக்கு Good Bye" - ஷாக் கொடுத்த லோகேஷ்

x

இந்தியாவின் Most Wanted இயக்குநராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், இன்னும் 10 படங்களுக்கு பிறகு படம் இயக்குவதை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.பிரபல யூ-டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள லோகேஷ் கனகராஜ், LCU கான்செப்டுக்கு கிடைத்த வரவேற்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், அடுத்தடுத்த படங்களில் அந்த வரவேற்பு குறையாத அளவுக்கு பொறுப்பாக செயல்பட உள்ளதாக கூறினார். மேலும், 10 படங்களுக்கு பிறகு படம் இயக்குவதை கைவிட திட்டமிட்டிருப்பதாகவும், நீண்ட நாட்கள் இந்த இடத்தில் இருக்கும் எண்ணமில்லை என்றும் கூறினார். லியோ படத்தை பொறுத்தவரை, இடைவிடாத படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறிய லோகேஷ், 22ம் தேதி தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருப்பதாக கூறினார். மேலும், நடிகர் விஜய்யை அண்ணா என்றுதான் அழைப்பதாகவும், காலை 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணிக்கே ஸ்பாட்டுக்கு வரும் விஜயின் உழைப்பை பார்த்து பிரமிப்பதாகவும் தெரிவித்தார். லியோ திரைப்படம் LCU-வுக்குள் வருமா என்ற கேள்விக்கு, இன்னும் நாட்கள் இருக்கிறது, அப்போது பார்த்துகொள்ளுங்கள் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்