திருப்பதி கோயிலில் 'ஆதிபுருஷ்' நாயகிக்கு KISS கொடுத்த இயக்குநர் - பாஜகவினர் கடும் கண்டனம்

x

ஆதிபுருஷ் படத்தின் ஹீரோயின் மற்றும் இயக்குநர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

பிரபாஸ் ராமராக நடித்துள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படம் ஜூன் 16ம் தேதி வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு, படத்தில் சீதையாக நடித்துள்ள க்ரித்தி சனன் மற்றும் இயக்குநர் ஓம் ராவத், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் க்ரித்தி காரில் ஏறி விடைபெறும் முன்பாக இயக்குநரை அணைத்துக்கொண்டார். அப்போது இயக்குநர் க்ரித்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார். பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் பலரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போதோ, விடைபெறும்போதோ இப்படி செய்வது வழக்கம் தான். ஆனால் திருப்பதி கோவிலில் இதை செய்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஆந்திர பாஜக செய்தி தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது வெங்கடேசப் பெருமானின் பல பக்தர்களை புண்படுத்தியுள்ளதாகவும், புனிதமான இடத்தில் இப்படி நடந்துகொண்டதற்கு அவர்கள் இருவரும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அண்மையில் , ஆதிபுருஷ் திரையிடப்படும் தியேட்டர்களில் அனுமானுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என்ற விஷயம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிய சர்ச்சை வெடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்