"1 தான போடுவாங்க, எதுக்கு 3 போட்டாங்க?என் குழந்த சாவுக்கு நீதி கிடைக்கணும்"- குமுறும் தந்தை
திண்டுக்கல் அருகே பிள்ளையர் நத்தம் பகுதியை சேர்ந்த தம்பதி விஜயகுமார் மற்றும் சுகன்யா. இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 52 நாள்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில், குழந்தை பிறந்து 45-ஆவது நாளில் போடப்படும் தடூப்பூசியை நாட்களாகியும் போடதாதால், ஆலாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து ஊழியர்கள் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்திய மறுநாள் திடீரென உடல்நல பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஒரே நாளில் குழந்தைக்கு 3 தடுப்பூசி செலுத்தப்பட்டதே இறப்பிற்கு காரணம் என குழந்தையின் தந்தை புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.