தகாத உறவில் இருந்த பெண்...திடீரென விலகிய கள்ளக்காதலன்..பழிவாங்க பெண் செய்த காரியம் - திண்டுக்கல்லில் பரபரப்பு

x

திண்டுக்கல்லில், கள்ளக்காதலனை பழிவாங்க, தன்னை தாக்கிவிட்டு 10 சவரன் நகையை பறித்துச் சென்றதாக பெண் நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் அம்பலமானது.

வேடசந்தூர் அருகே உள்ள குழந்தை கவுண்டன்பட்டியை சேர்ந்தவ கல்பனா என்பவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து, தனது 7 வயது மகனுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். கூம்பூர் பகுதியை சேர்ந்த வினோத் என்பவரும், கல்பனாவும் தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். கல்பனா தன்னை ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவரது நடவடிக்கை பிடிக்காமல், கல்பனாவை விட்டு வினோத் விலக ஆரம்பித்துள்ளார். இந்த நிலையில், தன்னை கடுமையாக தாக்கிவிட்டு 10 சவரன் நகையை வினோத் பறித்துச் சென்றதாகக் கூறி, மருத்துவமனையில் கல்பனா சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார், இதுகுறித்து வினோத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, கல்பனாவிடம் நகையை வாங்கி அடகு வைத்தது உண்மைதான் எனக் கூறிய வினோத், ஆனால் அந்த நகையை மீட்டுக் கொடுத்து விட்ட ரசீதையும் காண்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நகையை பறித்துச் சென்றதாக நாடகமாடிய கல்பனாவை போலீசார் எச்சரித்ததுடன், கல்பனாவை தாக்கியதாக வினோத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்