மாடு மாலை தாண்டும் போட்டி - சீறி பாய்ந்து எல்லைக்கோட்டை தொட்ட மாடுகள் - கோலாகலமான கோயில் திருவிழா

x

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, மதுரை வீரன் கோயில் திருவிழாவையொட்டி, மாடு மாலை தாண்டும் போட்டி நடைபெற்றது.

விழாவையொட்டி, திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 15 மந்தைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டு வரப்பட்டு, வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொத்தக்கொம்பு கோயிலுக்கு மாடுகள் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறி பாய்ந்து வந்த மாடுகள், எல்லைக்கோட்டை தொட்டன. முதலில் எல்லைக்கோட்டை தொட்ட முதல் 3 மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மாடுகளுக்கு சமூக வழக்கப்படி 3 இளம்பெண்கள், மஞ்சள் தெளித்து, எலும்பிச்சை பழத்தை வெற்றி பரிசாக அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்