இரும்புத் தடுப்பில் பைக் மோதி கண்டெய்னர் லாரியில் சிக்கிய ஊழியர்..!1 கிமீ-க்கு இழுத்து சென்று சாலையில் கிடந்த உடல் - நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து

x

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே கண்டெய்னர் லாரியில் சிக்கி அரசு கேபிள் டிவி நிறுவன ஊழியரின் உடல் 1 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளபட்டியைச் சேர்ந்தவர் தமலேந்திர சர்க்கார்... திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் தன் மனைவி மற்றும் மகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது பொட்டிசெட்டிபட்டி பிரிவில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் எதிரே வைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்பில் மோதி தடுமாறிய போது அவருக்குப் பின்னால் வந்த கண்டைனர் லாரியில் அந்த பைக் சிக்கியது. இதில் மனைவி மகள் காயங்களுடன் உயிர் தப்பினர். ஆனால் லாரியின் பின்புற சக்கரத்தில் மாட்டிக் கொண்ட தமலேந்திர சர்க்காரின் உடல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு சாலையின் நடுவே உருக்குலைந்து கிடந்தது... தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட லாரியை போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த தமலேந்திர சர்க்காரின் மனைவியும் மகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஆங்காங்கே சாலை நடுவே, வேகத்தடுப்புகள் வைத்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிர் சேதம் ஏற்படுவதால், அந்த வேகத்தடுப்புகளை அகற்ற வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்