திருடனாலும் திறக்க முடியாத திண்டுக்கல் பூட்டு... திருப்பதி கோயிலை பூட்டுவதே இதில் தானாம்..! - மீண்டும் தொழில் பொலிவு பெறுமா?

x

இன்றைய மாவட்ட ஸ்பெஷல் பகுதியில், அழிவின் விளிம்பில் உள்ள திண்டுக்கல் பூட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்த தொகுப்பை பார்க்கலாம்...

திருப்பதினா லட்டு... பழனினா பஞ்சாமிர்தம்... திருநெல் வேலினா அல்வா... அந்த வரிசயில் திண்டுக்கல் என்றதும் நினைவுக்கு வருவது திண்டுக்கல் பூட்டு தான்.. அத்தனை பெருமை மிகு அடையாளம் திண்டுக்கல் பூட்டு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கதைவை பூட்டுவதே திண்டுக்கல் பூட்டை வைத்து தான்...நவீன காலத்தில் கதவுகளை பூட்ட பல டெக்னாலஜி அறிமுகப்படுத்தப் பட்டாலும்.... திருடர்களாலேயே திறக்க முடியாத பூட்டு என்றால் அது இந்த திண்டுக்கல் பூட்டு தான்.

மேலும் பூட்டுல இத்தன ரகமா? என காண்போரையும் கேட்போரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் தினுசு தினுசா... ரக ரகமான பூட்டுக்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள்... திண்டுக்கல் பூட்டு வியாபாரிகள்.

உதாரணத்திற்கு திருப்பதி கோயிலுக்கு செய்து கொடுக்கப் பட்டது... 'மாங்காய் பூட்டு' இதை தொங்கு பூட்டுனும் சொல்றாங்க....நமக்கு தெரியாமல் யாராவது பூட்டை திறந்தால் பெல் அடிக்கும் பூட்டு கூட இருக்கிறது...

பெல் பூட்டை தொடர்ந்து... இரண்டு சாவி கொண்ட சில்லத்துப் பூட்டு... பல்வேறு பூட்டுக்களை திறப்பதற்கு

ஒரே சாவியை பயன்படுத்தும் மாஸ்டர் லாக் ரக பூட்டும் கூட இருக்கிறது. பெரும்பாலான ஓட்டல்களில் இந்த ரக பூட்டை தான் தேர்ந்தெடுக்கிறார்களாம்.

சுத்து பார்வை செல் பூட்டு என்ற ஒரு வகையும் உள்ளது. அதாவது பூட்டுகளில் சாவியை நுழைக்கின்ற துவாரத்தின் மேல் பகுதியில் ஒரு மூடி போன்ற அமைப்பு இருக்கும்... பூட்டை திறப்பதற்கும்... பூட்டுவதற்கும் அந்த மூடியை ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்தாக வேண்டும்.

குட்டித்தாள் வகை பூட்டுகளில் ஒரு சாவியை தொலைத்துவிட்டால் இன்னொரு சாவி கொண்டு பூட்டை திறந்து கொள்ளலாம். ஆனால் அப்படி திறந்த பிறகு தொலைந்த சாவி மீண்டும் கிடைத்தால்... அந்த சாவி இந்த பூட்டுல வேலை செய்யாதாம்.

இப்படி எக்கச்சக்க ரகத்துடன்....100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்யும் திண்டுக்கல் பூட்டு உற்பத்தி சமீபகாலமாக நலிவடைந்து வருவது வேதனை தரும் செய்தியாக இருக்கிறது.

நூற்றுக்கும் மேற்பட்ட பூட்டு தொழிற்சாலைகள் இயங்கி

வந்த நிலையில் இன்று பெரும்பாலான தொழிற்சாலைகள் அதே திண்டுக்கல் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டுள்ளன. பெரிய லாபமின்றி இக்கட்டான சூழ்நிலையில் சில தொழிற்சாலைகள் மட்டும் இன்னும் இயங்கிகொண்டிருக் கின்றன..

ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த தொழிலாளர்கள்... தற்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துவிட்டார்கள்... பூட்டு தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தற்போது சங்கம் மட்டும் தான் இருக்கிறது... ஆள் இல்லை.

இதற்கு காரணம்... கடுமையான உடல் உழைப்பில் உருவாக்கப்படும் பூட்டுகளுக்கு போதிய கூலி கிடைப்ப தில்லை. இதனால் அடுத்த சந்ததிகள் தாங்கள் பட்ட கஷ்டத்தை படவே கூடாது என நினைத்து... அடுத்த தலைமுறையினருக்கும் பூட்டு செய்யும் முறையை சொல்லி கொடுக்கவில்லை.

தற்போது திண்டுக்கல் முழுவதும் ஏறத்தாழ 300 தொழிலாளர்கள் மட்டுமே நேரடியாகவும்... மறைமுகமாகவும்... பூட்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்... திண்டுக்கலின் அடையாளமாக பார்க்கப்படும் பூட்டு தொழில் உற்பத்தியில் புதுமைகளை புகுத்தி... அழிவில் இருந்து காப்பாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே திண்டுக்கல்வாசிகளின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்