4 வருட கள்ளக்காதல்..கண்டித்த மகன்கள்...தாய் எடுத்த முடிவு - கள்ளக்காதலன் நடத்திய பயங்கரம்

x

திண்டுக்கல் அருகே மாலப்பட்டி நகரை சேர்ந்தவர் செல்வராணி. 45 வயதான இவருக்கு திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில், இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில், கட்டிட வேலை பார்த்து வந்த செல்வராணிக்கும், திருநகரை சேர்ந்த பிரபு என்பவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு 4 வருடத்திற்கும் மேலாக தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த, செல்வராணியின் மகன்கள் தாயை கண்டித்த நிலையில், பிரபுவுடன் பழகுவதை செல்வராணி நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரபு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி செல்வராணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை செல்வராணி கண்டுகொள்ளாத நிலையில், அவரின் தலையில் கல்லை போட்டு பிரபு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதன்பின்னர் விஷம் குடித்த பிரபுவை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், சிகிச்சைக்கு பின்பு கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்