கிரிப்டோ கரன்சிகளுக்கு போட்டியாக களமிறங்கும் டிஜிட்டல் ரூபாய்..! - ரிசர்வ் வங்கி அதிரடி

x

கிரிப்டோ கரன்சிகளுக்கு போட்டியாக களமிறங்கும் டிஜிட்டல் ரூபாய்..! - ரிசர்வ் வங்கி அதிரடி

டிஜிட்டல் ரூபாயயை உருவாக்கி வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள்ளது.

கிரிப்டோ நாணயங்களுக்கு போட்டியாக, டிஜிட்டல் ரூபாயை உருவாக்கி, முதல் கட்ட சோதனை செய்ய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

அச்சடிக்கப்பட்ட ரூபாய் தாள்களுக்கு பதிலாக டிஜிட்டல் வடிவிலான ரூபாயை குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சில்லரை விற்பனைகளுக்கான பணப் பரிவர்த்தனைகளில் டோக்கன் அடிப்படையிலான டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும்.

வங்கிகள் இடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் மொத்த விற்பனை பரிவர்த்தனைகளில் வங்கி கணக்கு அடிப்படையிலான டிஜிட்டல் ரூபாய் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டம் பல கட்ட சோதனைகளின் அடிப்படையில் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன் மூலம் பரிவர்த்தனைகளுக்கான செலவுகள் குறைந்து, நிதித் துறையின்

செயல் திறன் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.





Next Story

மேலும் செய்திகள்