டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா.. கருத்து கேட்கும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
மத்திய அரசின் புதிய டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா- 2022-ஐ, மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட டிஜிட்டல் டேட்டா பாதுகாப்பு மசோதா 2021 குறித்து, நாடாளுமன்றக் குழு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதில் எண்பத்தொரு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்றக் குழு கருத்து தெரிவித்தது. அதையடுத்து அந்த மசோதா நிறுத்திவைக்கப்பட்டு புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா, சிங்கப்பூர் நாடுகளின் சட்டங்கள், அமெரிக்க சட்டத்தின் ஒரு பகுதியை ஆய்வுசெய்து, புதிய மசோதாவின் அம்சங்கள் தீர்மானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story