இந்தியாவில் இன்று முதல் டிஜிட்டல் கரன்சி - ரிசர்வ் வங்கி அறிவிப்பு | digitalcurrency
இந்தியாவில் இன்று முதல் டிஜிட்டல் கரன்சி - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
நாடு முழுவதும் சோதனை முறையில் இன்று முதல் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட 9 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது. காகித நாணயத்தின் பயன்பாடு குறைந்து வருவதால், உலக அளவில் மத்திய வங்கிகள் இப்போது மிகவும் ஏற்று கொள்ளக்கூடிய மின்னணு வடிவ நாணயத்தை பிரபலப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்த வகையில், குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்காக டிஜிட்டல் கரன்ஸியை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சில நாட்களுக்கு முன்பு ரிசர்வ் வாங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று அறிமுகப்படுத்தப்படும், இந்த டிஜிட்டல் நாணயம், அடுத்த ஒரு மாதத்திற்குள் முழு பயன்பாட்டிற்கு வரும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனை பயன்பாட்டிற்கு டிஜிட்டல் நாணயங்கள் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.