டிஐஜி விஜயககுமார் தற்கொலை விவகாரம்..! காவலருக்கு ஏடிஜிபி அருண் கொடுத்த அதிரிச்சி | TN Police

x

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. காவல்துறை உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை மன அழுத்தம் இருப்பது குறித்தும், உயர் அதிகாரிகளுக்கும் வார விடுமுறை அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தவும், மன அழுத்தம் குறித்த கேள்விகள் அடங்கிய வினாத்தாள்களை கொடுத்து ஆய்வு மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது. காவலர்களைப் போல் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் கவுன்சிலிங் தரவும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு பின்னர் டிஐஜி விஜயகுமாரின் உருவப்படத்துக்கு காவல்துறை உயரதிகாரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்