பிரதமர் மோடியை விமர்சித்தாரா குஷ்பு....? - குஷ்புக்கு எதிராக வழக்கு தொடுப்பீர்களா? - தீயாய் பரவும் ட்வீட்

x

மோடி என்பதன் பொருளை ஊழல் என மாற்றுங்கள் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, 2018 ஆம் ஆண்டு பதிவிட்ட ட்விட்டர் பதிவு இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மோடி சமூகத்தை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தண்டனைப் பெற்ற ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், குஷ்புவின் பதிவை காங்கிரசார் பகிர்ந்து வருகிறார்கள். குஷ்புவின் பழைய ட்விட் பதிவை பகிர்ந்திருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மோடிஜி உங்கள் சிஷியைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வீர்களா...? என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். குஜராத் அமைச்சர் புர்னேஷ் மோடி, குஷ்புக்கு எதிராக வழக்கு தொடுப்பாரா? எனவும் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். காங்கிரசார் இப்போது பகிரும் ட்விட் குஷ்பு 2018 ஆம் ஆண்டு பதிவிட்டது. அப்போது குஷ்பு காங்கிரசில் இருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்