ஸ்பின் ஸ்கெட்ச் போட்ட தோனி.. சுருண்டு விழுந்த டெல்லி.. Playoff-ல் ஒரு காலை எடுத்து வைத்த CSK
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை அணியில் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 24 ரன்னிலும், கான்வே 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
ஆடுகளம் பேட்டர்களுக்கு சவாலாக இருந்த நிலையில், ரஹானே, மொயின் அலி, ஷிவம் துபே உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
கடைசி கட்டத்தில் களமிறங்கிய கேப்டன் தோனி, 2 சிக்சர்கள் மற்றும் ஒரு ஃபோர் உடன் 9 பந்துகளில் 20 ரன்களை குவித்ததால், ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
பின்னர் பேட்டிங் செய்த டெல்லி அணியில் கேப்டன் டேவிட் வார்னர் டக் அவுட் ஆனார். பிலிப் சால்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்தன.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் மட்டுமே டெல்லி எடுக்க, சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் பதீரனா 3 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.