செய்த சத்தியத்தை காத்த தோனி.. ஒன்றல்ல.. ரெண்டல்ல.. மொத்தம் பத்து "இனி ஒருத்தன் பொறந்து தான் வரணும்"

x

நடப்பு ஐபிஎல் சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னையின் கடைசி போட்டி... தோனியைப் பார்ப்பதற்காக அலைகடலென திரண்ட ரசிகர்கள்... திரும்பிய இடமெல்லாம் மஞ்சள் மயம்... மைதானத்தை அதிர வைத்த தோனி, தோனி கோஷம்...

இத்தகையவற்றுக்கு மத்தியில் பலம் வாய்ந்த குஜராத்தை குவாலிஃபயரில் எதிர்கொண்டது சென்னை...

டாஸ் குஜராத்திற்கு சாதகமாக, மைதானத்தின் தன்மையை சுட்டிக்காட்டி சென்னையை பேட்டிங் செய்ய பணித்தார் ஹர்திக் பாண்டியா...

தொடர்ந்து சென்னை அணிக்கு அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர் ஓபனர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே....

நோ பால் வீசப்பட்டதால் அவுட் கண்டத்தில் இருந்து தப்பிய ருதுராஜ் 60 ரன்களும், நேர்த்தியாக ஆடிய கான்வே 40 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சிக்சர் மன்னன் ஷிவம் துபே இம்முறை சோபிக்கவில்லை. 1 ரன்னில் நூர் அகமதுவிடம் கிளீன் போல்டானார்.

என்றாலும் அடுத்து வந்த ரஹானே, ராயுடு, ஜடேஜா ஓரளவுக்கு பங்களிக்க, 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் என்ற டீசன்டான ஸ்கோரை எட்டியது சென்னை...

மூன்று முறை சென்னையை வீழ்த்திய பெருமை உடன் களம் கண்ட குஜராத் அணியில் சஹாவும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சொற்ப ரன்களுக்கு வெளியேறினர்.

தொடக்க வீரர் சுப்மன் கில் மட்டும் ஒரு முனையில் நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. மிடில் ஓவர்களில் சென்னை சுழற்பந்து வீச்சாளர்கள் தீக்சனாவும் ஜடேஜாவும் மாறி மாறி கடும் நெருக்கடி அளித்தனர்.

சுப்மன் கில்லும் 42 ரன்களுக்கு வெளியேற, அதிரடி வீரர்கள் டேவிட் மில்லரும் திவாட்டியாவும் ஒற்றை இலக்கத்தில் நடையைக் கட்டினர்.

கடைசிக் கட்டத்தில் அடுத்தடுத்து பவுண்டரிகள் அடித்து சென்னை ரசிகர்களுக்கு லேசான அச்சத்தை தந்தார் ரஷித் கான். அவரது விக்கெட்டை தேஷ்பாண்டே வீழ்த்த, ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது குஜராத். இதன்மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை, 10வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

சென்னை தரப்பில் தீபக் சஹார், ஜடேஜா, தீக்சனா, பதீரனா, ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

கடந்த சீசனில் லீக் சுற்றுடன் சென்னை வெளியேறியபோது, அடுத்த சீசன் நிச்சயமாக கம்-பேக் தருவோம் எனக் கூறினார் தோனி...

தோனியின் நம்பிக்கை வீண் போகவில்லை.... சென்னையை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்று, தனது சொற்களை செயலாக்கிக் காட்டியுள்ளார் தோனி..


Next Story

மேலும் செய்திகள்