"தோனிக்கு காயம்.. முக்கிய வீரர் 3 மேட்ச் ஆட மாட்டார்" - CSK ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்
சென்னை அணியின் கேப்டன் தோனியின் முழங்கால் காயம், அவருக்கு தொல்லையையாக இருப்பதாக சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார். சென்னை - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தோனியின் முழங்கால் காயத்திலிருந்து குணமடைந்து வருவதாகவும், அந்த காயம் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் நேற்றைய போட்டியின்போது காயமடைந்த சிசண்டா மகலா, அடுத்த இரண்டு வாரங்களுக்கு விளையாட மாட்டார் எனவும் பிளெமிங் கூறினார். இதனால் சிசண்டா மகலா சென்னை அணியின் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிகிறது.
Next Story