பெண்ணை கடத்தி சென்ற தொழிலதிபர்.. 1 மணி நேரத்தில் காத்திருந்த ஆப்பு

x

தர்ம‌புரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செங்கல் சூளை அதிபரால் பெண் கடத்தப்பட்ட நிலையில், தந்தி டிவி செய்தி எதிரொலியால் ஒன்றரை மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.


தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியை அடுத்த ராமண்ணன் கொட்டாய் கிராமத்தை சார்ந்த லட்சுமி, தனது மகனுடன் திருவண்ணமலையில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வந்துள்ளார்.

செங்கல் சூளையில் 2 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கி கடனை கழித்து வந்த நிலையில், உடல்நிலை சரி இல்லாத‌தால் சொந்த ஊருக்கு சென்றார்.

உடல்நிலை சீரானதும் வேலைக்கு வருவதாக லட்சுமி கூறியுள்ளார். அதை ஏற்காத சூளை உரிமையாளர், மாலை 5 மணி அளவில் அடியாட்களுடன் சென்று மிரட்டி, லட்சுமியை காரில் கடத்தி சென்றார். இதுகுறித்த செய்தி தந்தி டிவியில் உடனடியாக வெளியானது.

இதையடுத்து, பிகார் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த போலீசார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆலமரத்துகொட்டாய் என்னும் இடத்தில் லட்சுமியை மீட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணன் மற்றும் பிரபு ஆகியோரை கைது செய்து, தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்