ராட்டினம் குறைவாக சுற்றியதால் ஆத்திரம்..! - ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்...வெளியான அதிர்ச்சி வீடியோ
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் திருவிழாவின் போது ராட்டினத்தில் 2 சுற்று குறைவாக சுற்றியதால் ராட்டின ஊழியர்களை ஒரு கும்பல் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதூர் மாரியம்மன் திருவிழாவின் கடைசி நாளான நேற்றிரவு இளைஞர்கள் சிலர் ராட்டினத்தில் ஏறியுள்ளனர்... ஒவ்வொரு முறை சுற்றும் போதும் எண்ணிக்கொண்டே சுற்றிய அந்த இளைஞர்கள், சொன்னதை விட 2 சுற்று குறைவாக சுற்றியதாகக் கூறி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருதரப்பிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மூர்க்கமாக தாக்கிக் கொள்ளும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
Next Story