மின் வேலியால் பலியான 2 தாய் யானைகள்.. புதைத்த இடத்தை சுற்றி சுற்றி வந்த 2 குட்டிகள் - நெஞ்சை உலுக்கிய காட்சிகள்

x
  • தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே, தாய் யானை இறந்த இடத்தை ஐந்து நாட்களாக சுற்றி வந்த குட்டி யானைகள், வனப்பகுதிக்குள் சென்றன.
  • மாரண்டஅள்ளி வனப்பகுதியில் இருந்து கடந்த 6ஆம் தேதி வெளியேறிய இரண்டு குட்டிகள் உள்பட ஐந்து யானைகள், காளிகவுண்டன்கொட்டாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் புகுந்தன.
  • அப்போது, முருகேசன் என்பவரது நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி, ஒரு ஆண் யானை, இரண்டு பெண் யானைகள் உயிரிழந்தன.
  • மூன்று யானைகளின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டன.
  • தாய் யானைகள் புதைக்கப்பட்ட பகுதியில், இரண்டு குட்டி யானைகள் ஐந்து நாட்களாக பாசப்போராட்டம் நடத்தின. இதனிடையே, முதுமலையில் இருந்து வந்த யானை பாகன்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் குட்டி யானைகளை பாதுகாத்து வந்தனர்.
  • இதனிடையே, மொரப்பூர் காட்டுப் பகுதியில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் யானைகள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்