அமித்ஷா முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை நடுங்கவிட்டவர்... தமிழகத்தின் ரியல் சிங்கம் - ஓய்வு பெறுகிறார்... டிஜிபி கந்தசாமி
- 1989 -ல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்ற கந்தசாமி பரமசிவன் திருநெல்வெலி மாவட்டத்தை சேர்ந்தவர்... தமிழ், இந்தி, ஆங்கிலம் உட்பட 5 மொழிகளை சரளமாக பேசும் கந்தசாமி, தமிழக காவல்துறையில் கும்பகோண ஏஎஸ்பியாக தனது காவல்துறை பயணத்தை தொடங்கியவர்...
- தொடர்ந்து, மதுரை உட்பட பல மாவட்டங்களின் தொழில்நுட்ப பிரிவில் காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவர், சிபிசிஐடி பிரிவின் சென்னை டிஐஜியாகவும், மும்பை சிபிஐ இணை இயக்குனராகவும் பணியாற்றியவர்..
- சர்வதேச அளவில் போஸ்னியாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளுக்கான காவல் அதிரடிப்படையில் இந்திய அணியை தலைமை ஏற்று சென்ற கந்தசாமி, அதில், பதக்கம் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது...
- தொடர்ந்து கடந்த 2010 -ல் நாட்டையே உலுக்கிய குஜராத் சொராபுதீன் ஷேக் போலி என்கவுண்ட்டரில் குற்றம் சாட்டப்பட்ட தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்ய சிபிஐ அமைத்த தனிப்படையில் டிஐஜியாக கந்தசாமியும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது... தொடர்ந்து கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முதல்வர் பினராய் விஜயனுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படும் லாவ்லின் ஊழல் வழக்கை விசாரித்தவரும் இவர் தான்...
- குஜராத், கேரளம் என பல மாநிலங்களில் அதிரடி காட்டிய கந்தசாமிக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக அரியனை ஏறிய போது தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்படுத்தினார்... அப்போது இவருக்கு தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை டிஜிபியாக பதவி வழங்கப்பட்டது...
- டிஜிபியாக பொறுப்பேற்ற கந்தசாமி தொடர்ச்சியாக முன்னாள் அதிமுக அமைச்சர்களான விஜயபாஸ்கர், வேலுமணி, எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் வீரமணி என பலர் மீது வழக்குபதிவு செய்து, அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது....
- இவ்வாறு பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் நேர்த்தியான அதிகாரியாக பல உயர் பதவிகளில் பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமியின் 34 வருடம் தமிழக காவல்துறை பணிக்கு மரியாதை செலுத்தி, அவரை வழியனுப்பும் ஓய்வு நிகழ்ச்சி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது...
Next Story