சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை

x

மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சதுரகிரி சுந்தரமாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில், மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாள்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து, இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது.

இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்