தேவாரம், திருவாசகம் ஒலிக்க தமிழ் சைவ முறைப்படி நடந்த திருமணம் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

x

கோவையில் தேவாரம், திருவாசகம் ஒலிக்க மாலை மாற்றி தமிழ் சைவ முறைப்படி திருமண ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. கோவை பகுதியை சேர்ந்த பிரவீன் குமாருக்கு கீர்த்திகா என்பவருடன் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டார், சிவ பக்தராக இருந்ததால், சைவ தமிழ் அடியார்களை கொண்டு முறைப்படி தேவாரம் திருவாசகம் பாடி, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளனர். சைவ முறைப்படி திருமணம் நடந்த இந்த திருமணத்தின் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்