வெறிச்சோடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.. டாக்டர்,நர்ஸ் இல்லாததால் துடித்த மூதாட்டி - கதறிய பிள்ளைகள்..தீயாய் பரவும் வீடியோ

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாததால், சிகிச்சைக்கு வந்த மூதாட்டி பாதிப்புக்கு ஆளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெத்தூர் பகுதியை சேர்ந்த எமிலி ஞானமூர்த்தி என்ற மூதாட்டி, உடல் நலக்குறைவால் மயக்கமடைந்தார். உடனடியாக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், நீண்ட நேரமாக மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், மூதாட்டிக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. அரை மணி நேரத்துக்கு பிறகு, செவிலியர் மட்டும் வந்து மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே, மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாமல் மூதாட்டி பாதிப்புக்குள்ளான வீடியோ இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்