மதிப்பிழக்கும் கிரானைட் கற்கள்.. 180 பேர் மீது வழக்கு.. 4 மாதம் டைம் கொடுத்த நீதிமன்றம்

x

கிரானைட் ஏலம் தொடர்பாக, பி.ஆர்.பி. கிரானைட், பி.ஆர்.பி. எக்ஸ்போர்ட்ஸ், விஜயா கிரானைட்ஸ் உள்ளிட்டவை சார்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.

மதுரை வடக்கு தாலுகாவில், அரசு புறம்போக்கு நிலங்களில் வைக்கப்பட்டுள்ள

25 ஆயிரத்து 321 பிளாக் கிரானைட்களை ஏலம் விடுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால்,

கிரானைட் மீதான உரிமையை கோர முடியவில்லை என நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புறம்போக்கு நிலத்தில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் மதிப்பிழந்து வருவதால், அவற்றை ஏலமிட முடிவு செய்துள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விற்க முடியாத கிரானைட் மற்றும் கழிவுகள், நிராகரிக்கப்பட்ட கிரானைட் ஆகியவற்றை அப்புறப்படுத்துவது தொடர்பாக,

4 மாதத்தில் முடிவெடுக்க, மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்