வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கினார் முதலமைச்சர்
உழவர் நலத்துறை சார்பில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வருகிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டில் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட சிறப்பு பருவ (சம்பா நெல் உட்பட) இதர பயிர்களுக்கு 481 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 734 விவசாயிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி தொடங்கி வைக்கிறார்
Next Story