விஜய் மக்கள் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுப்பு
நடிகர் விஜய் பிறந்தநாளன்று வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
நடிகர் விஜய்யின் 49 ஆவது பிறந்த நாளன்று, தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அவிநாசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை, 50 இருசக்கர வாகனங்களுடன் வாகன பேரணி நடத்த, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இறுதி நேரத்தில் கடிதம் கொடுத்ததன் அடிப்படடையில், வாகன பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் வருத்தத்தில் உள்ளனர்.
Next Story