வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்..? சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவி.. பீதியில் செங்கல்பட்டு மக்கள்

x

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கொக்கிலமேடு மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன்.

இவரது இளைய மகள் நிஷாந்தினி. இவர் பொன்னேரியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாமாண்டு பட்டப்படிப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், மழைக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை காரணமாக தனது வீட்டிற்கு வந்த போது, மாணவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நிஷாந்தினி உயிரிழந்தார்.

நிஷாந்தினியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சமீப நாள்களாக டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவுவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனிடையே, நிஷாந்தினியின் சகோதரி மகாசுபாஷினி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்