40 ஆண்டுகளாக வசித்த வீடுகள் இடிப்பு..கண் முன்னே சரிந்த வீட்டை பார்த்து கதறல் - தற்கொலைக்கு முயன்ற உரிமையாளர்கள்
ஆரணி அருகே புறம்போக்கு இடத்தில் இருந்த வீடுகளை இடித்ததால், வீட்டின் உரிமையாளர்கள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது...
சமீபத்தில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பேட்டை பகுதியில் பொதுப்பணித்துறை கால்வாயில் கட்டப்பட்டிருந்த வீடுகளை அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெண்கள் உள்பட வீட்டின் உரிமையாளர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து, அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி, வீடுகளை இடிக்கும் பணியை தொடர்ந்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த வீடுகளை இடித்ததால், அதன் உரிமையாளர்கள் கதறி அழுதனர்.
Next Story